Pages

Thursday, September 20, 2012

என் எண்ணச் சிதறல்கள் ....

என் காதலானவளே ...

நகமும் சதையுமாய்
இணைந்திருந்த நம் உறவு
இப்போதெல்லாம்
இலைமேல் நீர் துளியாய்
ஒட்டியும் ஒட்டாமலும் ..

பிரிவு
உன்னால் உன்டானதென்
நானும்
என்னால் உன்டானதென
நீயும்
எண்ணி எண்ணியே
தொலைத்துவிட்டோம்
நம் பிரியமான காதலை


பிரிவுக்கு
உன்மேல் பழி சொல்ல நானும்
என் மேல் பழி  சொல்ல நீயும்
நம் மேல் பழி சொல்ல நம் காதலும்
காத்திருகிறது ..

பிரிவின் வலி அறிந்திருப்போம்
இருவரும்
இனியாவது பிரியாமல்
வாழ்ந்திருப்போம்  வா


பேசிப் பேசித்தான்  இருவரும்
காதல் கொண்டோம்
வா மீண்டும் பேசி பேசியே
பிரிவை "கொல்வோம்" வா

சண்டையிட்டது யார் உன்
பிரியமானவன் தானே என்று
நீயும்

சண்டையிட்டது யார் என்
பிடித்தமானவள்  தானே என்று
நானும்
சமரசம் செய்து கொள்வோம் வா ..


மௌனம் என்ற ஆடை போர்த்தி
இன்னும் எத்தனை நாளைக்குதான்
உன் செவ்விதழை மூடி வைப்பாய்
என்னை திட்டவாவது
உன் மௌனம் கலைத்துவிடு  அன்பே

வா பிரிந்து இருந்த காலத்திற்கும்
சேர்த்து காதல் செய்வோம்
வா ...வா .....

கிறுக்கல்கள் .....
சசி எம் குமார் .......

12 comments:

முத்தரசு said...

செய்ங்கய்யா
நல்லா
செய்ங்க

Unknown said...

மாப்ளை நல்லாயிருக்கு கழுதை! ச்சே கவிதை...!கழுதை தொலையுதுன்னு விடாம புலம்பி கவிதை எழுதி மறுபடியும் பிக்கப் பண்ற....!நடத்து ராசா நடத்து..!

Unknown said...

Comment - 2

சசிமோஹன்.. said...

மனசாட்சி™ said...
செய்ங்கய்யா
நல்லா
செய்ங்க//// இதுல உள்குத்து ஏதும் இல்லே மாம்ஸ் ..

சசிமோஹன்.. said...

வீடு சுரேஸ்குமார் said...
மாப்ளை நல்லாயிருக்கு கழுதை! ச்சே கவிதை...!கழுதை தொலையுதுன்னு விடாம புலம்பி கவிதை எழுதி மறுபடியும் பிக்கப் பண்ற....!நடத்து ராசா நடத்து..!//// என்னை கழுதை சாரி கவிதை எழுத சொல்லி தூண்டி விடுவதே நீர் தானே மாமோய் ...

செயல் நீங்கள்
வெறும் கருவி மட்டுமே நான் மாம்ஸ் ..

முத்தரசு said...

நோ
நோ
உள்குத்து
அப்படின்னா
என்ன

முத்தரசு said...

நோ
நோ
உள்குத்து
அப்படின்னா
என்ன

சசிமோஹன்.. said...

உள்குத்துன்னா ரூம் போட்டு அடிப்பது

முத்தரசு said...

யாரை

Unknown said...

< எதார்த்தமான வரிகள், பதார்த்தமான காதல் >

Theepz said...

Nice:)

தேன் நிலா said...

பிளாக்கர் தளத்தில் பலரும் வலைப்பதிவுகளை எழுதி வருகின்றனர். ஆனால் பிளாக்கரில் வலைப்பதிவுகளைப் படிப்பவர்கள் தமிழில் மறுமொழி (கருத்து)இட வசதிகள் இல்லை. தமிழ் மறுமொழிப்பெட்டி அமைப்பதன் மூலம் எளிமையாக தமிழில் கருத்திட முடியும்.

"தமிழ் மறுமொழிப் பெட்டி" அமைப்பது எப்படி என்பதை எளிமையாக விளக்குகிறது இப்பதிவு. பிளாக்கர் தள வலைப்பதிவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். மேலதிக தகவல்களுக்கு சுட்டியைச் கீழுள்ள சொடுக்கி வாசிக்கவும்.
பிளாக்கர் தளத்தில் தமிழ் மறுமொழிப் பெட்டி அமைப்பது எப்படி?