Pages

Wednesday, September 11, 2013

சினிமா விமர்சன பதிவு எழுதுவது எப்படி

சினிமா விமர்சன பதிவு எழுதுவது எப்படி- பாகம் 1

ஊரு உலகத்துல இருக்கிற எல்லா பதிவரும் சினிமா விமர்சனம் பண்றாங்க ஏன் நாம எழுத கூடாதுன்னும் , அதை எப்படி எழுதுறதுன்னும், யோசிச்சுகிட்டு என்னைப்போலவே அண்ணாந்து மோட்டுவளையத்தை பார்த்துகிட்டு இருப்பவர்களுக்காக .....

முதலில் சினிமாவுக்கு போகும்போது ஒரு குயர் ரூல்டோ அல்லது அன்ரூல்டு நோட்டு கைவசம் அல்லது பை (Bag) வசம் அவசியம் அப்போதான் முக்கியமான சீன்களை (நோ டபுள் மீனிங் ) குறித்து வைத்துக்கொள்ள உதவும் மேலும் உடன்  சக பதிவரையோ, அல்லது நண்பர்களையோ கூட்டி போகணும் அப்போதான் நாலு பத்திக்கு சினிமாவுக்கு சென்றபொழுது அப்படின்னு ஒப்பேத்தமுடியும்
அப்புறம் ஒரு வேளை கூட வந்தவர் சக பதிவர் எனில் அவரிடம் இடைவேளையின் போதே நான் இந்த படத்துக்கு விமர்சனம் எழுத போறேன் நீ தயவு செய்து எழுதவேண்டாம் என்று உங்கள் வசதிகேற்ப கட்லேட்டோ, கம்மரகட்டோ வாங்கி கொடுத்து சூடம் ஏத்தி சத்தியம் வாங்கி கொள்ள வேண்டும்

பிறகு தியேட்டர் பெயர்,  தியேட்டரில் எத்தனை பேர் வந்து இருக்கிறார்கள் ,  , அதில் எத்தனை பேர் காதல்ஜோடிகள் என்பது போந்தார மேலாதிக்க தகவல்களை குறித்து கொள்ளவேண்டும் , சினிமா பதிவை எழுதும் முன் நாம் சினிமா பார்க்க வீட்டில் இருந்து கிளம்பியதை ஒரு பதிவாகவும், நிரம்பி வழியும் போக்குவரத்து நெரிசலை தாண்டி  முட்டு சந்துக்குள் புகுந்து ஒருவழியாக தியேட்டர் சென்றதை ஒரு பதிவாகவும் தியேட்டர் சென்று  டிக்கெட் வாங்கியதை  ஒரு பதிவாகவும் , மொத்தம் நான்கு அல்லது ஐந்து பதிவுகள் தேத்திவிடுவது நலம், அப்படியே தியேட்டர் வாசலில் ஒரு போட்டோவும் , போஸ்டர் முன்னாடி ஒருபோட்டோவும் , டிக்கெட் கிழிப்பவரின் அருகில் நின்று ஒரு போட்டோவும் எடுத்து வைத்துக்கொண்டு அதை அந்தந்த பார்ட் பதிவுகளில் பிரசுரிக்க வேண்டும்,மிகமுக்கியமாய்  மொக்கை படங்களையும் பார்த்து பழகி கொள்ள வேண்டும் அமேசிங் , எக்ஸ்ட்ராடினரி , போன்ற மேல்தட்டு வார்த்தைகளையும், உங்களுக்கு தெரிந்த பின்நவீனத்துவ வார்த்தைகளையும் போட்டு நிரப்ப பழகிகொள்ளுதல் அவசியம் மேலும் நமது ஊரில் தடை செய்யப்பட்ட படங்களை அண்டை மாநிலங்களில் சென்று பார்க்கும் முனைப்பு அவசியம் வேண்டும் அப்போதுதான் பதிவு உலகம் நம்மை உற்றுநோக்க ஆரம்பிக்கும்,

பிறகு படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் போடப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கையும் குறித்துக்கொண்டு மறக்காமல் பிள்ளையார் சுழியாய் திரு.முகேஷ் (புகையிலை பயன்படுத்தி வீரமரணம் அடைந்த) அன்னாருக்கு ஒரு இரங்கற்பா வாசித்து விட்டு விமர்சனம் எழுத தொடங்கவேண்டும் எழுதுவதற்கு முன்னால் எப்போதும் மறக்காமல் கீழ் வரும் மந்திரத்தை நினைவில் நிறுத்தி கொள்ளவேண்டும்

ஊரு உலகம் ஆஹா, ஓகோன்னு புகழாரம் சூட்டுகின்ற படத்தை நாம் அது நொள்ளை இது நொள்ளை என்று கழுவி கழுவி ஊத்த வேண்டும்
எல்லோரும் கழுவி கழுவி ஊத்தும் படத்தை நாம் உலக சினிமாவென்று கொண்டாட வேண்டும்

மறக்காமல் இதை நினைவில் நிறுத்திக்கொண்டு எழுதஆரம்பிக்க வேண்டும் ,

- தொடரும் 

அன்புடன்

சசிமோஹன் குமார் ;-)



23 comments:

Unknown said...

மச்சி நீ ஆருர் முனா, சிவாவை கிண்டலடிக்கிறியோன்னு தோணுது....தோணுதென்ன அதான் உண்மை.....(கோத்து விட்டாச்சு நம்ம வேலை முடிஞ்சது)

சசிமோஹன்.. said...

அவங்கதான் இந்த பதிவை எழுத சொன்னங்க மாம்ஸ் -(இது எப்படி இருக்கு )

Unknown said...

கரட்தான் ஆரூர் மூனா, சிவா, செல்வின்னு எல்லாரையும் கலந்து கட்டி கலாய்ச்சிட்டாராமாம் ... ஹி ஹி ஹி

Unknown said...

என்னடா டெம்ப்ளேட் இது சைடுல ஒன்னையுமே காணோம், வீடு மாம்ஸ்கிட்ட சொல்லு நல்லா செஞ்சு குடுப்பாரு, ஐ மீன் பிளாக்க :-)

Unknown said...

இந்த பாகம் பத்தோடு பதினொன்றாக இல்லாமால் பல்லாயிரமாக பெருக வாழ்த்துக்கள் மச்சி, குட் போஸ்ட் கீப் இட் அப்

சசிமோஹன்.. said...

நீங்க ரெண்டுபேர் மட்டும் போதும்யா ..

சசிமோஹன்.. said...

நான் வீடு மாம்ச்கிட்ட கேட்டேன் மாம்ஸ் இந்த டெம்ப்ளெட் சரிவரலை கொஞ்சம் சரி பண்ணிகுடுங்க அப்படின்னு ..அதுக்கு அவரு சொல்றாரு உன்னை மாதி புத் பதிவருக்கு செஞ்சு கொடுத்தா என்னை ஊருல ஒரு பய மதிக்க மாட்டான்னு (இப்ப மட்டும் மதிக்கிறங்களா ?).. அவரு பெரிய பதிவராம்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லாத்தான் கழுவி கழுவி ஊத்திட்டீங்க...

குறுகிய காலத்தில் என்னவொரு வளர்ச்'சி'...

முத்தரசு said...

//திண்டுக்கல் தனபாலன் said...

குறுகிய காலத்தில் என்னவொரு வளர்ச்'சி'//

இல்லைங்கோ...எப்படி இப்படி ஒரு எழுச்சி.

முத்தரசு said...

ச்சே இம்புட்டு நாளு இது தெரியாம போச்சே
இதான் மேட்டரா

Robert said...

ஓ ஓ இப்படித்தான் சினிமா விமர்சனம் எழுதணுமா ??? இது தெரியாம நான் தடவை ரெண்டு மூணு எழுதிட்டேனையா !!!

Robert said...
This comment has been removed by the author.
Robert said...

இனிமே அடுத்த பதிவை அடுத்த வருஷம் செப்டம்பர்ல தான் போடுவீங்களா ??? இல்ல 2012 சப்டெம்பர் 2 ;
2013செப்டம்பர் 2 ன்னு இருக்கு அதான் !!!

Anonymous said...

வாழ்க நீ எம்மான்

அரே ஓ சாம்பா

ராஜி said...

இவ்வளவுதானா?! சினிமா விமர்சன்ம் என்பது பெரிய விசயம்ன்னுல இத்தனை நாளா நினைச்சிருந்தேன். இன்னிக்கே ஒரு படம் பார்த்து நாளைக்கே ஒரு போஸ்ட் போடுடுட்றேன்

Manimaran said...

ஹா..ஹா... செம..

Manimaran said...


//அமேசிங் , எக்ஸ்ட்ராடினரி , போன்ற மேல்தட்டு வார்த்தைகளையும், உங்களுக்கு தெரிந்த பின்நவீனத்துவ வார்த்தைகளையும் போட்டு நிரப்ப பழகிகொள்ளுதல் அவசியம்//

கலக்கல் பாஸ்...

நாய் நக்ஸ் said...

இதுக்கு..இம்புட்டு கஷ்டப்படனுமா???

படத்துக்கு போகும்போதே...பிளாட் கண்டிஷனில் போகணும்....மட்டைஆகிடனும்...அதுக்கு முன்...இந்த படம் பாக்க தியேட்டரில் இருக்கேன்....fb-ல் ஸ்டேட்ஸ் போட்டா...வர கமெண்ட்-ஐ வச்சி நூறு பதிவு தேத்திடலாம்.....

இத நான் சொன்னா____________.....

காட்டான் said...

நக்ஸ் படத்துக்கு போகாமலேயே வீட்டிலேயே மட்டையாகிட்டு,பேஸ்புக்கில ஸ்டே போட்டு பதிவ தேத்தினால் பணமும் நேரமும் மிச்சமே..!

Philosophy Prabhakaran said...

// மேலாதிக்க //

இதென்ன ஆணாதிக்கம் மாதிரி புதுசா ஏதாவது வார்த்தையா ?

சசிமோஹன்.. said...

/ மேலாதிக்க //

இதென்ன ஆணாதிக்கம் மாதிரி புதுசா ஏதாவது வார்த்தையா ? பிரபா சார் இதெல்லாம் தொழில் ரகசியம் இப்படி எதுனா புதுவார்தையா அடிச்சுவிட்ட்டுகிட்டே இருக்கணும்

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

வலைச்சர தள இணைப்பு : கடிக்கீறியே வாத்து !!